கோவை தெற்குபாளையம் அருகே அனுமதியின்றி சேவல் சண்டை - 4 பேர் கைது!

கோவை தெற்குபாளையம் பகுதியில் போலீசார் நடத்திய ரோந்து பணியில் அனுமதியின்றி சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார், சேவல் மற்றும் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட தெற்குப் பாளையம் பகுதியில் சிலர் சேவல் சண்டையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில், பெரியநாயக்கன் பாளையம் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையில், போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட பெரிய நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த விஜயகுமார், மணிகண்டன், தெற்குப்பாளையத்தைச் சேர்ந்த ஜீவா சங்கர் மற்றும் கூடலூரைச் சேர்ந்த கலிவரதராஜன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

அனுமதியின்றி சேவல் சண்டையில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 3 சேவல்கள் மற்றும் 300 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...