கோவை துடியலூரில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா

கோவை துடியலூரில்15வது வட்ட கழகம் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.


கோவை: கோவை துடியலூரில் திமுக 15வது வட்ட கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாகக் கோவை திமுக 15வது வட்ட கழகம் சார்பில் செயலாளர் நா. ஈஸ்வரன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வண்ணக்கோலமிட்டு 'தமிழ்நாடு வாழ்க' என எழுதி புத்தம் புது பானையில் பொங்கல் வைத்தனர்.

இதைத்தொடர்ந்து துடியலூர் பகுதி கழக செயலாளர் அருள்குமார் முன்னிலை வகித்து கட்சிக் கொடி ஏறி வைத்து பொதுமக்களுக்குப் பொங்கல் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துடியலூர் பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், மற்றும் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...