கோவை கணபதி அருகே விபத்து - 2 மாத சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி

கோவை மலுமிச்சம்பட்டி அருகே கடந்த நவம்பர் மாதம் நிகழ்ந்த விபத்தில் மனைவி உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த கணபதியை சேர்ந்த துரைசாமி 2 மாதங்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை மாவட்டம் கணபதி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் மலுமிச்சம்பட்டி அருகே சென்றுள்ளார்.

அப்போது மலுமிச்சம்பட்டி அருகே நிகழ்ந்த விபத்தில், இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதில், படுகாயம் அடைந்த துரைசாமி சரவணம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 2 மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (15.01.2023) துரைசாமியும் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...