கோவை கோவில்மேடு பகுதியில் அனல் பறந்த கபடி போட்டி

பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவை கோவில்மேடு பகுதியில் நடைபெற்ற கபடி போட்டியில் ஆக்ரோஷமாக விளையாடி திறமைகளை வெளிக்காட்டிய வீராங்கனைகள்.


கோவை: கோவில்மேடு பகுதியில் இளைஞர் மன்றம் சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மகளிருக்கான கபடி போட்டி நடைபெற்றது.

கோவை தடாகம் சாலை கோவில்மேடு பகுதியில் இளைஞர் மன்றம் செயல்பட்டு வருகிறது. 1967ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இளைஞர் மன்றம் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இருபாலருக்கும் கபடி போட்டி நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில் 56ஆவது ஆண்டு விழா, மன்றத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா மற்றும் தை திருநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாவட்ட அளவிலான ஆண், பெண் என இருபாலருக்கான கபடி போட்டி இன்று தொடங்கியது.



பெண்களுக்கான கபடி போட்டியில் கோவையைச் சேர்ந்த 10 அணிகள் மோதின. இதில் பெண்கள் அணியினர் நேர்த்தியான மற்றும் ஆக்ரோஷமான விளையாட்டை வெளிக்காட்டினர். வேகம், விவேகம் என கபடி விளையாட்டில் பெண்கள் அணியினர் தங்களது திறமைகளைக் காட்டி விளையாடியது பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்தது.



பொங்கல் திருநாளை ஊர்மக்கள், பெண்கள் என கபடி போட்டியை கண்டுகளித்துடன் களத்தில் பெண்களின் அனல் பறக்கும் ஆட்டத்தைக் கண்டு வியந்தனர். நாளை நடைபெறும் ஆண்களுக்கான கபடி போட்டியில் கோவையைச் சேர்ந்த 20 அணிகள் மோதவுள்ள நிலையில் ஆடுகளம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் வெற்றி பெறும் அணிகளுக்குப் பரிசுத்தொகையும், கேடயம் மற்றும் கோப்பைகள் பரிசாக அளிக்கப்படவுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...