திருப்பூர் நொய்யல் நதிக்கரையில் சமத்துவ பொங்கல் - 3,000 பெண்கள் கூடி பொங்கல் வைத்து கொண்டாட்டம்!

நொய்யல் நதிக்கரையோரம் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவை, மேயர் மற்றும் ஆட்சியர் பாரம்பரிய உடையணிந்து துவக்கி வைத்த நிலையில் அனைத்து மதத்தை சேர்ந்த 3,000 பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்து கொண்டாடினர்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வளர்மதி பாலம் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையோரம் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது.



திருப்பூர் மாநகராட்சி நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் சார்பாக நடைபெற்ற மூன்று நாள் நிகழ்வில் முதல் இரண்டு நாட்கள் மாலை நேரத்தில் பல்வேறு தமிழ் பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



மூன்றாவது நாளான இன்று திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையோரம் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் வசித்து வரும் அனைத்து மதத்தை சேர்ந்த 3,000 பெண்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.



இதனை முன்னிட்டு நடைபெற்ற துவக்க விழாவில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் வினீத், மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினவ், சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உள்ளிட்டோர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் கலந்து கொண்ட பொங்கல் விழாவினை துவக்கி வைத்தனர்.



இதனை தொடர்ந்து நடைபெற்ற சமத்துவ பொங்கலின் ஒரு பகுதியாக வள்ளி கும்மியாட்டம், பெருஞ்சலங்கை ஆட்டம், பறை இசை, நடனம் உள்ளிட்டவை அரங்கேறின.



இந்த நிகழ்வில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...