திருப்பூர் பல்லடத்தில் சாலை பாதுகாப்பு வார விழா - இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காவல்துறை துணை கண்காணிப்பாளர் சௌமியா கலந்துகொண்டு பேரணியை கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.



திருப்பூர்: பல்லடத்தில் 34வது சாலைப் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. பல்லடம் ரெயின்போ ரோட்டரி சங்கம், பல்லடம் போக்குவரத்து காவல் துறையினர், பல்லடம் காவல் துறையினர் மற்றும் பல்லடம் தாலுக்கா வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் இணைந்து இதை நடத்தினர்.



சாலை பாதுகாப்பு வார விழாவின் ஒரு பகுதியாக, தலைக்கவசம் அணிவது குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



பல்லடம் நால்ரோட்டில் துவங்கிய இந்த பேரணியை பல்லடம் டி.எஸ்.பி செளமியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக செட்டிபாளையம் பிரிவு வரை சென்ற இந்த இரு சக்கர வாகனப் பேரணியானது, என்ஜிஆர் சாலை வழியாக மீண்டும் நால் ரோட்டில் நிறைவுபெற்றது.



கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஹெல்மெட் போட்டு இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கும், சீட் பெல்ட் அணிந்து காரில் வந்தவர்களுக்கும் இனிப்புகள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், பல்லடம் காவல் ஆய்வாளர் மணிகண்டன், போக்குவரத்து ஆய்வாளர் திருநாவுக்கரசு, காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...