காவல் நிலையத்தில் துன்புறுத்தல் - கோவை சட்டக்கல்லூரி மாணவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு

கோவையில் காவல்நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம் அவருக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதன்படி, ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், பாதிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவருக்கு வழங்கினார்.


கோவை: கோவை திருமலையம்பாளையம் விநாயகர் கோயில் வீதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். சட்டக் கல்லூரி மாணவரான இவர், கடந்த 2019 ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி, தனது வீட்டின் அருகே திடக்கழிவு மேலாண்மை மையம் அமையவிருப்பது குறித்து திருமலையாம்பாளையம் பேரூராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, இத்திட்டம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் ரமேஷ்குமார் தகவல்களை பெற்றுள்ளார். இதன் காரணமாக, அப்போதைய மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி, வடவள்ளி மற்றும் தொண்டாமுத்தூர் சரக ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் கே ஜி சாவடி உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆகியோர் ரமேஷ்குமாரை காவல்நிலையம் அழைத்துச் சென்று துன்புறுத்தியதோடு, எச்சரித்தும் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, சட்டக்கல்லூரி மாணவர் ரமேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதேபோல், மாநில மனித உரிமை ஆணையத்திலும் இது குறித்து அவர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மாநில மனித உரிமைகள் ஆணையம், பாதிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர் ரமேஷ்குமாருக்கு, தமிழக அரசு ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

அந்த இழப்பீட்டுத் தொகையை, உதவி ஆய்வாளரிடம் ரூ.50,000, ஆய்வாளர்கள் இருவரிடம் தலா ரூ.25,000 என வசூலித்து அளிக்கவும் உத்தரவிட்டது. இதை அடுத்து காவல்துறை துன்புறுத்தலுக்கு ஆளான சட்டக்கல்லூரி மாணவர் ரமேஷ்குமாருக்கு, ரூ.1 லட்சத்திற்கான காசோலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெயரில் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...