கோவை சின்னவேடம்பட்டி அருகே ஹோட்டல் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

சின்னவேடம்பட்டி அருகே ஹோட்டலில் வேலை செய்து வந்த விஷ்ணு என்பவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை.


கோவை: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு. 23 வயதான இவர் கடந்த 4 ஆண்டுகளாக கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் சப்ளையராக வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் ஹோட்டலில் இருந்த ஒரு அறையில் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விஷ்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹோட்டல் ஊழியர் ஒருவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...