கோவை இடிகரை பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா - ஒயிலாட்டத்தை கண்டு ரசித்த பக்தர்கள்!

இடிகரை பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜையின் 47 வது நாளையொட்டி நடைபெற்ற தமிழரின் பாரம்பரிய ஒயிலாட்டம் நிகழ்ச்சி பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.


கோவை: கோவை மாவட்டம் இடிகரை பகுதியில் புகழ்பெற்ற பட்டி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

இந்நிலையில், இந்த கோவிலில் மண்டல பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.



இதனிடையே மண்டல பூஜையின் 47ஆம் நாளையொட்டி கோவை கருமத்தம்பட்டி சங்கமம் குழுவினரின் தமிழரின் பாரம்பரிய ஒயிலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த மண்டல பூஜையின் 48 வது நிறைவு நாளன்று கணபதி ஹோமம், சங்காபிஷேகம் மற்றும் கலச பூஜையோடு மண்டல பூஜை நிறைவு பெற உள்ளது.



இதனிடையே நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நுற்றுக்கணக்கான வருகை தந்தனர்.



இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இடிகரை இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...