கோவை சரவணம்பட்டி அருகே ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர் - போலீசார் விசாரணை

சரவணம்பட்டி அருகே முதியவர் ஒருவர் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் முத்துவேல் (65). இவர் நேற்றைய தினம் சரவணம்பட்டி அருகே உள்ள பாரதிநகர் பகுதியில் மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதியவரை பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் முதியவரின் உடலில் சில இரத்தக் காயங்களும் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், முதியவரின் உடலைக் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து முதியவரின் மர்ம மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...