கோவையில் சாலையோரம் படுத்திருந்த தொழிலாளி எரித்துக்கொலை - 3 பேர் கைது

கோவை சிங்காநல்லூரில் சாலையோரம் படுத்திருந்த தொழிலாளி தீ வைத்து எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 30). இவர் கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் சாலையோரம் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார். கடந்த 14 ஆம் தேதி இரவு சுரேஷ், அந்த பகுதியில் வழக்கம்போல சாலையோரத்தில் படுத்துத் தூங்கியதாக தெரிகிறது. அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சுரேஷ் மீது டீசலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றார்.

இதனால், உடல் முழுவதும் தீ பரவியதில் சுரேஷின் உடல் 90 சதவீதம் அளவு கருகியது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் சுரேசை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து, சிங்காநல்லூர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, தீவைத்த மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒருவர் தீவைத்து எரித்து விட்டு, தப்பி ஓடும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது.

அதனடிப்படையில், தேடுதல் வேட்டை நடத்திய காவல்துறையினர், சுரேசுடன், அதே பகுதியில் கூலி வேலை செய்து கொண்டு சாலையில் தங்கியிருக்கும் சுப்பிரமணி (வயது57), என்ற தொழிலாளியை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் ஒன்றாக சேர்ந்த மதுகுடித்ததாகவும், பையில் இருந்த பணத்தை சுரேஷ் எடுத்ததாக சந்தேகப்பட்டு வாக்குவாதம் செய்ததாகவும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சுரேஷ் தூங்கும்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பாட்டிலை எடுத்துச்சென்று டீசலை வாங்கிவந்து அவரை தீ வைத்து கொளுத்தியதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, சுப்பிரமணியை கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தடை உத்தரவை மீறி பாட்டிலில் டீசல் வழங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர் பாஸ்கரன் (வயது 62), கேசியர் பாலகிருஷ்ணன் (வயது57) ஆகிய இருவரையும் சிங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...