உடுமலை அருகே ஆல்கொண்டமால கோவிலில் விவசாயிகள் சிறப்பு வழிபாடு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காணும் பொங்கலை முன்னிட்டு ஆல்கொண்ட மால கோவிலில் விவசாயிகள் சிறப்பு வழிபாடு.


திருப்பூர்: உடுமலை அருகே காணும் பொங்கலை முன்னிட்டு ஆல்கொண்ட மால கோவிலில், கால்நடைகள் நலமாக வாழ உருவ பொம்மை வைத்தும் தேவாரட்டம் ஆடியும் விவசாயிகள் சிறப்பு வழிபாடு செய்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சோமவாரப்பட்டியில் உள்ள ஆல்கொண்ட மால கோவிலில் காணும் பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு விவசாயிகள் தங்களது கால்நடைகள் நீண்ட காலமாக நலமுடன் வாழ பசு உருவ பொம்மை வைத்து நேர்த்திக்கடன் செய்து சிறப்பு வழிபாடு செய்தனர்.



முன்னோர்கள் கூறிய அறிவுரையின்படி பல ஆண்டுகளாக கால்நடைகள் நலமாய் வாழ உருவ பொம்மை வைத்து வழிபாடு செய்தால் கால்நடைகள் நீடுழி வாழ இறைவன் கை கொடுப்பார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.



மேலும், இதற்கிடையில் பாரம்பரியமான சலகெருது ஆட்டம், உருமி இசையுடன் தேவாராட்டம் ஆடி சிறப்பு வழிப்பாட்டில் ஈடுபட்டனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலிருந்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...