கோவை அருகே தனியார் பேருந்துகள் மோதி விபத்து - பெண் பலி

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சென்றான்பாளையம் பிரிவில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டு முந்தமுயன்றபோது ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் படுகாயம் அடைந்தார்.


கோவை: கிணத்துக்கடவு அருகே கோதவாடியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவருடைய மனைவி அங்காத்தாள். இந்தத் தம்பதிக்கு முனியப்பன் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட மகன் உள்ளார்.

இந்த நிலையில், தனது மகன் முனியப்பனுடன், அங்கத்தாள் பொள்ளாச்சி - கோவை சாலை உள்ள சென்றான்பாளையம் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி போட்டி போட்டுக்கொண்டு வந்த தனியார் பேருந்துகள் அங்கத்தாள் மற்றும் அவரது மகன் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் சம்பவ இடத்திலேயே அங்காத்தாள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகன் முனியப்பனை மீட்ட அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு போலீசார், அங்காத்தாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்களான சந்தோஷ் குமார், செந்தில்குமார் ஆகியோர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...