கோவையில் பொங்கல் பண்டிகையில் 3 நாட்களும் கூடுதலாக சேர்ந்த 1,100 டன் குப்பைகள் உடனடியாக அகற்றம்..!

கோவையில் பொங்கல் பண்டிகையான 3 நாட்களில் ஒவ்வொரு நாளும் கூடுதலாக 1,100 டன் குப்பைகள் சேர்ந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு குப்பைகளை உடனடியாக அகற்றியுள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் தினமும் 1000 முதல் 1,200 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மட்டும் வழக்கத்தை விட கூடுதலாக குப்பைகள் சேரும் என்பது வாடிக்கை தான்.



ஆனாலும், இந்தாண்டு பொங்கல் பண்டிகை கொண்டாடத்தை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களிலும் தலா 1,100 டன் குப்பைகள் சேர்ந்துள்ளது.



இதனிடையே முன்னெச்சரிக்கையாக கடந்த சனிக்கிழமையில் இருந்தே மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிகளை வேகப்படுத்தியதால் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.

ஒவ்வொது நாளும் கூடுதலாக 1,100 டன் குப்பைகள் சேர்ந்தாலும் வழக்கமான பணியாளர்களை கொண்டே இந்த குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒரு சில இடங்களில் குப்பைகள் தேங்கியே உள்ளது, அதனையும் இன்று மாலைக்குள் முழுமையாக அகற்றப்படும் என மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



மண்டல வாரியாக தூய்மை பணியாளர்கள் சிறு சிறு வண்டிகள் மூலம் கூடுதலாக போடப்பட்ட குப்பைகளை சேகரித்தும், வீடு வீடாகவும் குப்பைகள் சேகரித்தும் அனைத்து லாரிகள் மூலம் இரவு பகலாக வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு திடக்கழிவு மேலாண்மை செய்யும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகை நாட்களில் கூட துரிதமாக செயல்பட்டு மாநகரில் தூய்மை பணிகளை சிறப்பாக செய்த ஊழியர்களுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...