உடுமலையில் பொரியல் தட்டைப் பயிர் மகசூல் அமோகம் - விவசாயிகள் மகிழ்ச்சி..!

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பொரியல் தட்டைப் பயிர் நல்ல மகசூல் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொரியல் தட்டை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தட்டை, இந்த பட்டத்தில் நல்ல மகசூல் கிடைத்துள்ளதோடு, நல்ல விலையும் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளது.

இதுகுறித்து தட்டை சாகுபடி விவசாயிகளிடம் கேட்டபோது, பொரியல் தட்டையை அனைத்து வகையான நிலங்களிலும், அனைத்து பருவத்திலும் சாகுபடி செய்யலாம். உடுமலை பகுதியில் இந்தப் பயிர் நல்ல மகசூல் கொடுக்கிறது. ஏக்கருக்கு நாளொன்றுக்கு 100 முதல் 150 கிலோ வரை அறுவடை செய்கிறோம்.

சாகுபடிக்கு ஏக்கருக்கு 15,000 முதல் 20 ஆயிரம் வரை செலவு ஆகிறது. ஒரு ஏக்கருக்கு ஆறு முதல் பத்து டன் வரை மகசூல் கிடைக்கிறது. இந்தப் பொரியல் தட்டையின் விலை கிலோ ஒன்று ரூ.15 முதல் ரூ.30 வரை இருப்பதாலும், இந்த விலை நிலையாக இருப்பதாலும் விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டுவருகின்றனர் என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...