கோவை அருகே நெஞ்சுவலி காரணமாக வடமாநில இளைஞர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

கவுண்டம்பாளையம் அருகே பெயிண்டராக வேலை செய்து வந்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த பிண்ட்டு (21) என்பவர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பிண்ட்டு (21). இவர் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தங்கி பெயிண்டராக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் (17.01.2023) வீட்டில் இருந்த போது, பிண்ட்டுவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிண்ட்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த மருத்துவமனைக்கு வந்த துடியலூர் காவல்துறையினர், பிண்ட்டுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...