தாராபுரம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் மார்ச்.1 ல் முற்றுகைப் போராட்டம் - விவசாயிகள் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் நல்லதங்காள் ஓடை அணையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 40 கோடி வழங்கக்கோரி மார்ச்.1ம் தேதி ஆர்.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டுத் தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவரை அந்தத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பில் தாராபுரம் ஆர்.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட மாநில செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில செயற்குழு கூட்டமும், பொங்கல் உழவர் தின கொடியேற்று விழாவும் தாராபுரத்தில் உள்ள அழகு நாச்சியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் அலங்கியம் ஈஸ்வரமுர்த்தி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியம், மாநில செயலாளர் ஈஸ்வரன், ஈரோடு மாவட்ட தலைவர் மகுடீஸ்வரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.



அப்போது மாநில தலைவர் செல்லமுத்து கூறியதாவது:

தாராபுரம் தாலுக்கா பொன்னிவாடி கிராமத்தில் தாராபுரம் நல்லதங்காள் அணைக்கு விவசாயிகள் 750 ஏக்கர் நிலத்தை 2002 ஆம்ஆண்டு வழங்கினார்கள். அரசு வழங்கிய நஷ்ட ஈடு தொகை போதாது என தாராபுரம் உரிமையியல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் மானாவாரி நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 70 ஆயிரம், பாசன நிலங்களுக்கு ஒரு லட்சமும் 15% சதவீதம் வட்டியுடன் நஷ்ட ஈடுவழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

விவசாயிகளுக்கு 40 கோடி ரூபாய் நஷ்டஈட்டு தொகை இதுவரை வழங்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் தாராபுரம் ஆர்டிஓ, அலுவலகம் மற்றும் பிடபிள்யூடி அலுவலகத்தை ஜப்திசெய்ய உத்தரவிட்டது. எனினும் இதுவரை விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டு தொகை வழங்கப்படவில்லை. வரும் பிப்ரவரி 28.ஆம் தேதிக்குள் நிவாரணம் வழங்கப்படவில்லை என்றால் மார்ச் 1ஆம் தேதி தாராபுரம் ஆர்.டி.ஒ.அலுவலகத்தை பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்துள்ளனர். தற்போது கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டு தேங்காய் ஒன்றுக்கு ரூபாய் எட்டுக்கு விற்பனையாகிறது. தேங்காய் கொப்பரையை அரசே கொள்முதல் செய்தாலும் அனைத்து விவசாயிகளும் கொப்பரை உற்பத்தி செய்ய இயலாது. எனவே, அரசு முழு தேங்காயை விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும். தற்போது மத்திய அரசு டான்பிட் மூலம் கொப்பரை கிலோ ரூபாய் 105.90க்கு கொள்முதல் செய்கிறது.

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, பெதப்பம்பட்டி, பொங்கலூர் காங்கேயம் ஆகிய ஒழுங்குமுறை கூடங்களில் கொப்பரைகொள்முதல் செய்யப்படுகிறது. இந்தக் கொள்முதல் நிலையங்கள் தாராபுரத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. எனவே, அலங்கியம் ஒழுங்குமுறைகூடத்தில் கொப்பரை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...