கோவையில் ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் பலி - போலீசார் விசாரணை

சிங்காநல்லூர் அடுத்த சோமனூர் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து ரயில்வே போலீசார் விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூரை அருகே சோமனூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு அருகேயுள்ள தண்டவாளத்தில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது.

இதுதொடர்பாக அவ்வழியாக சென்றவர்கள், ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் போத்தனூர் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் சபரி ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.



இதையடுத்து அடையாளம் தெரியாத நபரின் உடலை கைப்பற்றிய ரயில்வே காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நபர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ள போலீசார், ரயில் மோதி இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த நபர் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களை கொண்ட கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...