உதகை அடுத்த கல்லட்டி சோதனை சாவடியில் உலா வந்த சிறுத்தை - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

கல்லட்டி சோதனை சாவடி அருகே நள்ளிரவில் உலா வந்த சிறுத்தை குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் கல்லட்டி மலை பாதையும் ஒன்று. 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதை மிகவும் ஆபத்தானதாகவும் கருதப்படுகிறது.

இந்த பகுதியில் வனவிலங்குகள் வேட்டை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை கண்காணிக்கும் வகையில், வனத்துறை சார்பாக சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

உதகையில் இருந்து மசினகுடி செல்லும் பொதுமக்களும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகளும் இந்த மலைப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.



இந்த நிலையில் மலை பாதையில் உள்ள 15-வது கொண்டை ஊசி வளைவில் அமைந்துள்ள சோதனை சாவடி அருகே இரவு நேரங்களில் அடிக்கடி சிறுத்தை ஒன்று உலா வருவதால், இரவுநேர பணியில் இருக்கும் ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்ற வேண்டிய சூழலில் இருப்பதாக கூறுகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி சோதனை சாவடி அருகே சிறுத்தை உலா வந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...