கோவையில் இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறிப்பு!

கோவை போத்தனூர் ரயில் நிலையம் அருகே இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2,000 பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் அபிமணி (37). இவர் கோவை சிட்கோ பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு போத்தனூர் ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் அபிமணி நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 2 இளைஞர்கள், அவரை மறித்து அவசரமாக ஒரு போன் செய்ய வேண்டும் என செல்போனை கேட்டுள்ளனர்.

அதை உண்மை என நம்பிய அபிமணி இளைஞர்களிடம் தனது செல்போனை கொடுத்துள்ளார். செல்போனை பெற்று கொண்ட அந்த இளைஞர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அபிமணி தன்னிடம் பணம் இல்லை என்று கூறி தப்ப முயன்றுள்ளார். அப்போது அவரை மடக்கி பிடித்த அந்த இளைஞர்கள் அபிமணி சட்டை பையில் இருந்த ரூ.2,000 பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக அபிமணி போத்தனூர் காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...