'மருத்துவ காப்பீடு திட்டத்தில் பிரதமர் மோடி படம் இருக்க வேண்டும்' - திருப்பூர் பாஜகவினர் கோரிக்கை

மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்படுத்தும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பிரதமர் மோடியின் புகைப்படமும் இடம்பெற வேண்டும் எனக் பாஜகவினர் கோரிக்கை.



திருப்பூர்: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், மாநில அரசுத் திட்டமா? மத்திய அரசுத் திட்டமா? என்று திருப்பூர் பாஜக விவசாய அணியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி திட்டப்பொருப்பாளர் அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:



தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் குறித்து மருத்துவமனைகளில் விழிப்புணர்வு தகவல் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழக அரசின் இந்நாள் முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் விளம்பரத்தில் PMJAY எனக் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு விரிவாக்கம் பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத போஜனா என்பதாகும். இத்திட்டம் மத்திய அரசின் திட்டம் என்பதால் இதன் மூலம் பனை, தென்னை தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

இத்திட்டத்தின் மூலமாக சுமார் 1300-க்கும் மேற்பட்ட நோய்களுக்குச் சிகிச்சை பெறலாம். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஆண்டொன்றிற்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவச் சிகிச்சை பெற முடியும்.

மத்திய அரசின் திட்டத்தைத் தமிழக அரசு விளம்பரப்படுத்தும் போது பிரதமரின் புகைப்படத்தையும் இடம் பெற வேண்டும். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மாநில அரசுத் திட்டமா? அல்லது மத்திய அரசுத் திட்டமா என விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்குப் பதில் மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்படுத்தும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பிரதமர் மோடியின் புகைப்படமும் இடம்பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...