உடுமலையில் இரும்புக் கம்பிகள் திருடிய ஒப்பந்ததாரர் - போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தேசிய நெடுஞ்சாலை பணி நடந்து வரும் இடத்தில் வைக்கப்பட்ட இரும்பு கம்பிகளை திருடிய ஒப்பந்ததாரரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பாலப்பம்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிகாலையில், தேசிய நெடுஞ்சாலை அமைத்து வரும் இடத்தில் இரும்பு கம்பிகளை ஒப்பந்ததாரர் திருடியுள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், அவரை கையும் களவுமாகப் பிடித்து வைத்துக் கொண்டு உடுமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை காவல்துறையினர், பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த ஒப்பந்ததாரரான திண்டுக்கல் மாவட்டம் பேகம்புத்தூர் பகுதியை சேர்ந்த காஜா மொய்தீன் (வயது37) என்பவரை கைது செய்தனர். அவர் மீது ஐ.பி.சி.379 பிரிவின்கீழ் திருட்டு வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தேசிய நெடுஞ்சாலை அமைக்கப் பயன்படுத்தப்படவிருந்த இரும்பு கம்புகளை ஏற்றிச் சென்ற வாகனத்தையும் காவல்துறையினர் மடக்கிப்பிடித்து, கம்பிகளை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...