உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் - கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி மலையில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற பாரம்பரிய வள்ளி கும்மியாட்டத்தை சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ளது மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான திருமூர்த்திமலை. இங்கு, சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் சிறுதானிய பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி குழுவுடன் உடுமலை ராயல் அரிமா சங்கம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் ஆகியவையும் இணைந்து இந்த பொங்கல் விழாவை நடத்தினர்.



கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்ச்சிகளாக, பாரம்பரிய வள்ளி கும்மி, குதிரை வண்டி, மாட்டு வண்டி ஊர்வலம் நடைபெற்றது.



காணும் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவில், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாக கலந்து கொண்டு, பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி ஆனந்தன், வட்டாட்சியர் கண்ணாமணி, மாவட்ட சுற்றுலாத்துறை ஒருங்கிணைப்பாளர், மைவாடி விவேகானந்தா வித்யாலயம் நிறுவனர் மூர்த்தி, உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் தலைவர் சத்தியம் பாபு, எஸ் எம் டிராவல்ஸ் நாகராஜ், தளிபேரூராட்சி தலைவர் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...