'பி.என்.பாளையம் அருகே யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும்' - கோவை ஆட்சியரிடம் மனு

பெரியநாயக்கன் பாளையம் அடுத்த கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீபாரதி நகரில், அடிப்படை வசதிகளான தார்சாலை, தெருவிளக்கு, இரவு 7 மணிக்கு மேல் பேருந்து வசதி மற்றும் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கூடலூர் நகராட்சிக்குட்பட்ட ஸ்ரீ பாரதி நகர் பகுதியில் 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஏராளமான குடும்பங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்ந்து கொண்டு வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அரசின் சார்பில் வீடு கட்டுவதற்கான இடம் ஒதுக்கப்பட்டு, அதற்கான பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் தங்கள் உழைப்பில் மண் சுவர் எழுப்பியும், ஓட்டு வீடுகள் கட்டியும் குடியிருந்து வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள தெருக்களில் மின் விளக்குகள் கூட இல்லை என கூறும் அப்பகுதி மக்கள், மலையை ஒட்டிய பகுதி என்பதால், யானை, கரடி, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் இருந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் யானைகள் அடிக்கடி வந்து, வீடுகள் மற்றும் விளைநிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்துவதால், அப்பகுதி மக்கள், அச்சத்துடனேயே வசித்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனிடையே கடந்த 13 ஆம் தேதி இரவு அப்பகுதியில் புகுந்த 2 யானைகள் சுந்தரவேல் மற்றும் தெய்வானை ஆகியோரது வீடுகளை சேதப்படுத்தி உள்ளன. இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

வனவிலங்குகளின் அச்சுறுத்தல் காரணமாக அப்பகுதி வழியாக செல்லும் பேருந்துகள் கூட 5 மணிக்கு மேல் இயக்கப்படாததால், பொதுமக்கள் வேலைக்கு செல்வதற்கு கூட நெருக்கடியான சூழல் நிலவி வருவதாகவும் கூறுகின்றனர்.



இந்நிலையில், அப்பகுதி மக்கள் வனவிலங்குகள் தாக்குதலில் இருந்து, தங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ளனர்.

அவர்களது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் பின்வருமாறு,

1. உடனடியாக தெரு மின் விளக்குகள் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

2. குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழையாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கையாக அகழிகள் வெட்டி, மின் வேலி அமைத்துக் கொடுக்க வேண்டும்.

3. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளை மீண்டும் பெரியநாயக்கன் பாளையத்திலிருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீ பாரதி நகர் பகுதிக்கு வர ஏற்பாடு செய்ய வேண்டும்.

4. பாதுகாப்பில்லாத மண்சுவர் ஓட்டு வீடுகளை அப்புறப்படுத்தி, அரசு கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. தார் சாலை அமைக்க ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...