கோவை பாலமலை ஆதிவாசிகளுக்கு ரூ.5.74 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்!

கோவை மாவட்டத்தில் பாலமலை ஆதிவாசிகள் கிராமத்திற்கு சுமார் 5 கோடியே 74 லட்சம் மதிப்பில், 477 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.



கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள நாயக்கன்பாளையம் ஊராட்சியில் ஆதிவாசி கிராமமான பாலமலை உள்ளது. இங்குள்ள ரங்கநாதர் கோவில் அன்னதானக்கூடத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறை சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் வருவாய் கோட்டாட்சியர் பூமா வரவேற்றார். மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ, கூடலூர் நகராட்சித்தலைவர் அறிவரசு, பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் நர்மதா, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

மாவட்ட ஆட்சியருக்கு ஆதிவாசி கிராம மக்கள் உற்சாக நடனமாடி வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து வேலாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகள் மூலம் அமைக்கப்பட்ட முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.



அதன்பிறகு, 26 பேருக்கு சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவிதொகை, 23 பேருக்கு வருவாய் துறையால் வழங்கப்படும் இலவச வீட்டுமனை பட்டா, 35 பேருக்கு பசுமை வீடு, 7 நபர்களுக்கு மகளிர்த்திட்டத்தின் கீழ் உதவித்தொகை, 67 பேருக்கு பழங்குடியினர் விவசாய அடையாள அட்டை, 241 பேருக்கு தமிழ்நடு வனத்துறை சார்பில் உதவிகள் என மொத்தம் 477 நபர்களுக்கு சுமார் 5 கோடியே 74 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பழங்குடி மக்களின் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக்கொண்டார். மேலும், குருடம்பாளையம் ஊராட்சித்தலைவர் நமக்கு நாமே திட்டம் மூலம் வேலை செய்ய சுமார் 24 லட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட பயனாளிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...