கோவையில் போதை மாத்திரைகள் விற்பனை - 3 பேர் கைது

கோவையில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் கைதான நிலையில், 208 போதை மாத்திரைகள், சிரஞ்சுகள் பறிமுதல்.


கோவை: மத்தம்பாளையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை தடுக்க மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள மத்தம்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களைப் பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர்.

இதையடுத்து அவர்களைச் சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள், சிரஞ்சுகள் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பிடிப்பட்ட நபர்கள் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவர்த்தனன்(23), பிரவீன்குமார் (21), நவீன்குமார் (21). என்பதும், இவர்கள் அப்பகுதி இளைஞர்களைக் குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சா மற்றும் 280 போதை மாத்திரைகள் சிரஞ்சுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...