உடுமலையில் மாட்டுவண்டியில் அமைச்சர் சாமிநாதன் பயணம் - ஆல்கொண்டமால கோயிலில் தரிசனம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகிலுள்ள ஆல் கொண்ட மால கோயிலுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாட்டுவண்டியில் சென்று சாமி தரிசனம் செய்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டியில் ஆல் கொண்ட மால கோவில் உள்ளது.



இந்தக் கோயிலுக்கு சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் மாட்டுவண்டிகளில் பயணித்து சாமி தரிசனம் செய்வது பாரம்பரியமாக நடைபெற்றுவருகிறது.

பொங்கல் பண்டிகையின்போது, இந்தக் கோயிலில் நடைபெறும் சலக்கெருது ஆட்டமும் மிகவும் பிரசித்திபெற்றது. இந்த ஆண்டுக்கான பொங்கல் திருவிழா கடந்த 16ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், நிறைவு நாளான தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மாட்டு வண்டியில் பயணம் செய்து, ஆல்கொண்டமால கோயிலுக்குச் சென்றார்.



அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் அமைச்சருக்கு பரிவட்டம் கட்டி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...