திருப்பூர் உடுமலை அருகே கோவிலுக்கு தானமாக வழங்கிய கன்றுகளுக்கு அம்மை நோய் தாக்குதல்..!

உடுமலை அடுத்த சோமவார்பட்டியில் உள்ள ஆல் கொண்ட மால கோவிலுக்கு பக்தர்கள் தானமாக வழங்கிய கன்றுகளுக்கு அம்மை நோய் தாக்கிய நிலையில், கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை அளித்து கண்காணிப்பு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள சோமவார்பட்டியில் உள்ள ஆல் கொண்ட மால கோவிலுக்கு பக்தர்கள் கன்றுகளை தானமாக வழங்குவது வழக்கம். பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கடந்த 16ஆம் தேதி முதல் கோவிலுக்கு வந்து கன்றுகளை தானமாக கொடுக்கத் தொடங்கினர்.

இவ்வாறு பெறப்படும் கன்றுகளுக்கு பராமரிப்பு கட்டணமாக ஆயிரம் ரூபாய் கோவில் நிர்வாகத்தினர் வசூலித்து வந்தனர். இந்த நிலையில் தானமாக வழங்கப்பட்ட கன்றுகளுக்கு அம்மை நோய் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து நோய் தாக்குதலுக்கு உள்ளான கன்றுகளை தனிமைப்படுத்திய கோவில் நிர்வாகத்தினர், கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் கடந்த 2 நாட்களாக சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவில் நிர்வாகத்தினர், தானமாக பெறப்பட்ட கன்றுகளின் எண்ணிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தகவலை வெளியிடவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மேலும், திருவிழா ஏற்பாடுகளில் குளறுபடி, கூடுதல் நுழைவு கட்டணம் வசூல் மற்றும் கன்றுகள் பராமரிப்பில் குழப்பம் ஏற்படுத்திய கோவில் நிர்வாகத்தை கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...