கோவையில் ஜாவா ஷோரூமில் திடீர் தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள சொகுசு பைக்குகள் தீக்கிரை!

கோவை - அவினாசி சாலையில் செயல்பட்டு வந்த ஜாவா ஷோரூமில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், சர்வீஸ் செய்வதற்கு விடப்பட்டிருந்த, பல லட்சம் மதிப்பிலான 7 சொகுசு பைக்குகள் முழுவதும் தீயில் எரிந்து சேதமாகின.


கோவை: கோவை - அவினாசி சாலையில் ஜாவா எனப்படும் இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் ஷோரூம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஷோரூமில் பலவகையான சொகுசு பைக்குகள் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஷோரூமில் ஏற்கனவே 9 இருசக்கர வாகனங்கள் சர்வீஸ் செய்வதற்கு விடப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இந்த ஷோரூமில் நேற்றைய தினம் (18.01.2023) நள்ளிரவு ஒரு மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அவ்வழியாக சென்ற ஒருவர் தீ கொழுந்து விட்டு எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.



இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான 7 இருசக்கர வாகனங்கள் முழுவதுமாக தீக்கிரையாகின.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தீ விபத்து தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த ஷோரூமிற்கு காவலாளி இல்லாததால் தீ முழுமையாக பரவிய பிறகு வெளியில் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...