வேங்கைவயல் விவகாரம் - உதகையில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக உதகையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.


கோவை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள உயர்மட்ட குடிநீர் தொட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சில சமூகவிரோதிகள் மனித மலத்தை கலந்தனர். இந்த சம்வபவம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 5-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.



இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றபட்டுள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் சார்பாக குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பத்தை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தபட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மாவட்ட தலைவர் சகாதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...