ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி சூலூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி கோவை சூலூர் அருகே வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி வி.எம்.சி மனோகர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் புதிய பேருந்து நிறுத்தம் அருகே ஆளுநர் ஆர்.என்.ரவியை, மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை புறநகர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சி மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு, சட்டப் பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதத்தை கண்டித்தும், ஆன்லைன் ரம்மி, நீட் தேர்வு உள்ளிட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.எம்.சி. மனோகரன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநரின் செயல்பாடுகள் தமிழ்நாட்டுக்கு எதிரானதாகவே இருந்து வருகிறது.

சட்டமன்ற மாண்பை கெடுக்கும் விதமாகவும் ஆன்லைனில் உள்ளிட்ட விளையாட்டுக்கு தடை செய்யும் மசோதாவை அங்கீகரிக்காமல் இருந்து வரும் ஆளுநரின் செயல்பாடு கண்டனத்துக்குரியது, என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...