உடுமலையில் இடிந்துவிழும் நிலையில் பள்ளியின் சுற்றுச்சுவர் - அச்சத்தில் மாணவர்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், மாணவர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை - தளி சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.



குட்டைத்திடல் எதிரில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்தம் பின்னால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.



இதனால், அந்தச்சுவர் எந்தநேரத்திலும் இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளது.



இதனால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, விபத்துகள் ஏற்படும்முன் சம்பந்தபட்ட அதிகாரிகள் பள்ளியின் சுற்றுச்சுவரை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...