கோவையில் காய்கறி விலை திடீர் சரிவு - காரணம் தெரியுமா?!

கோவையில் காய்கறிகளின் விலை அதிரடியாகக் குறைந்திருப்பது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சபரிமலை சீசன் மற்றும் பொங்கல் பண்டிகைகள் முடிவடைந்ததே இந்த விலை சரிவுக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: சபரிமலை சீசன் மற்றும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு கோவையில் காய்கறிகளின் விலை கடந்த சில வாரங்களாக ஏறுமுகத்தில் இருந்துவந்தது. குறிப்பாக தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் விளைச்சலாகும் காய்கறிகள், பூலுவபட்டி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.



கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.150 க்கு விற்பனையான மொச்சை, இன்று ரூ.20க்கு விற்பனையாகிறது, ரூ.50 ரூபாய்க்கு விற்பனையான மற்ற பயறு வகைகள் ரூ,20 ரூபாய்க்கும், ரூ.80 முதல் 90 க்கு விற்பனையான கத்தரிக்காய் தற்போது கிலோ ஒன்று 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தக்காளி விலை ஏற்ற இறக்கமின்றி டிப்பருக்கு 500 ரூபாய் என்ற அளவில் இருந்துவருகிறது. தற்போது, பனிக்காலம் என்பதால் வெண்டை வரத்து குறைவாக இருப்பதால் அதன் விலை இன்னும் ஏறுமுகத்திலேயே இருந்துவருகிறது. மற்ற காய்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.



வரக்கூடிய இரண்டு மாதங்களுக்கு சாகுபடி அதிகமாக இருக்கும் என்பதால், காய்கறிகளின் விலை இன்னும் குறையவே வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொத்த சந்தையில் குறைவான விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதால் சில்லறை விற்பனையிலும் அதன் விலை கடுமையாக சரிந்துள்ளது. இருப்பினும், காய்கறிகளின் விலை சரிவு கோவை வாழ் இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...