கோவை கிணத்துக்கடவு அருகே சேவல் சண்டை சூதாட்டம் - 3 பேர் கைது

கிணத்துக்கடவு அடுத்த கோவில்பாளையம் அருகே பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம் நடத்திய மூன்று பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த சேவல் மற்றும் ரூ.300 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தப்படுவதாக கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், காணியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன், முள்ளுப்பாடி பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்த சேவல் மற்றும் 300 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...