மேட்டுப்பாளையத்தில் இந்தியா - ரஷ்ய கலாச்சார நிகழ்ச்சி -‘ரஞ்சிதமே’ பாடலுக்கு ரஷ்யர்கள் நடனம்!

மேட்டுப்பாளையம் அருகே தனியார் பள்ளியில் பள்ளியில் ரஷ்யா - இந்தியா நல்லுறவு கலாச்சார நடன நிகழ்ச்சியில் ரஷ்ய நடன குழுவினர், ரஞ்சிதமே பாடலுக்கு ஆடிய குத்தாட்டம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் இந்தியா - ரஷ்யா நல்லுறவுக்கான கலாச்சார நடன நிகழ்ச்சி நடைபெற்றது.



பள்ளி மாணவர்களுக்கு ரஷ்ய நாட்டின் கலாச்சாரம், நடனம் குறித்து அறிந்துகொள்ள நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ரஷ்யாவை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று தங்களது நாட்டின் பல்வேறு கலாச்சார நாட்டிய நடனங்களை அரங்கேற்றி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



மேலும் இந்த நிகழ்ச்சியில் பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படத்தில் ஹிட் அடித்த குத்து பாடலான ரஞ்சிதமே பாடலுக்கு ரஷ்யா நாட்டு கலைஞர்கள் தமிழ் பெண்கள் அணியும் பாவாடை தாவணி அணிந்து, குத்தாட்டம் போட்டனர்.

ரஷ்ய குழுவினரின் இந்த நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் மாணவர்கள், கரகோஷங்களை எழுப்பி கலைஞர்களை உற்சாகப்படுத்தினர்.

இதுகுறித்து கலாச்சார குழுவின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் தங்கப்பன் பேசுகையில், "இந்தியா மற்றும் ரஷ்ய நாட்டு கலாச்சாரங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக 20 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இம்மாத இறுதி வரை ரஷ்ய கலாச்சார நடன நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது" என்றார்.



முன்னதாக ரஷ்ய கலைஞர்களுக்கு பள்ளி நிர்வாக அறங்காவலர் மோகன்தாஸ், மணிமேகலை மோகன்தாஸ் ஆகியோர், பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...