கோவை துடியலூரில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு செயல்பாடுகளில் தலையிடுவதைக் கண்டித்து துடியலூரில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம்.


கோவை: துடியலூரில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து அகில இந்தியக் காங்கிரஸ் வடக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே வடக்கு மாவட்ட அகில இந்தியக் காங்கிரஸ் சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்டத் தலைவர் பி.வி.மணி தலைமை தாங்கினார். பெரியநாயக்கன்பாளையம் வட்டார தலைவர் மோகன்ராஜ் வரவேற்றுப் பேசினார்.



மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் குமார், பொதுச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, பொறுப்பாளர் சின்னு ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு செயல்பாடுகளில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஆளுநர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சுரேந்திரபாபு, நாகராஜ், எஸ் எஸ் குளம் வட்டார தலைவர் ஆனந்தகுமார், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூரியகுமார், பார்த்திபன், சதீஷ்குமார், காதர் பாய், சசிகுமார், அசோக், சிங்காரவேலு, மருதகிரி ராஜேந்திரன், ஜே.வி.எஸ் மணி, கார்த்தி, வைகை ரஃபிக், மனோகர், வடிவேல், வேலுமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...