'தமிழ்நாட்டில் பாஜகவுக்குப் பொதுமக்கள் ஆதரவு..!' - தாராபுரத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் பேட்டி

தமிழ்நாட்டில் பாஜகவுக்குப் பொதுமக்கள் முழுமையான ஆதரவு அளித்து வருகின்றனர் என்று பாஜக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில துணைத்தலைவர் ஆற்றல் அசோக்குமார் பேச்சு.


திருப்பூர்: தாராபுரம் அருகே மூலனூர் தெற்கு ஒன்றிய கிராமப்புறங்களில் பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு சார்பில் மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் மூலனூர் தெற்கு ஒன்றியம் பொன்னிவாடி ஊராட்சியில் பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு சார்பில் மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கொடியேற்று விழா மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலைமையில் நடைபெற்றது.



இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி கொடியேற்றி வைத்தார். மாநிலத் துணைத் தலைவர் ஆற்றல் அசோக் குமார் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இதேபோல் பகவான் கோவில், அத்தி மரத்துப்புதூர், பொன்னிவாடி, எல்லப்பம்பாளையம் உள்ளிட்ட 32 இடங்களில் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து பொன்னிவாடி கிராமத்தில் பாஜக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய மாநில துணைத்தலைவர் அசோக்குமார், தமிழகத்தில் பாஜக பொதுமக்கள் முழுமையாக ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

மக்களின் பிரச்னைகளை ஆட்சியாளர்களிடம் எடுத்துக் கூறி மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் பாஜக முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

கிராமப்புற மக்களுக்குப் பிரதமர் மோடியின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், கிராமப்புறங்களில் பாஜக பங்களிப்பை உறுதிப்படுத்தும் வகையில், கொடியேற்றி வைத்து பாஜக தொண்டர்கள் மக்கள் பணியாற்றிட வேண்டும் எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...