ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை யாரிடம்..? - அதிமுக புகழேந்தி பரபரப்பு தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவில் ஓபிஎஸ் உடன் மட்டுமே பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் என்று அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி பேச்சு.


கோவை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கூட்டணி தொடர்பாக ஓபிஎஸ் உடன் மட்டுமே பாஜக, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கோவையில் அதிமுக ஒபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது அவர் கூறியதாவது, நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வி கண்ட, தாமகாவினர் ஈரோடு கிழக்கு தொகுதியிலும் போட்டியிடக் கோருவதாகவும், ஜி.கே வாசனிடம் மீண்டும் அத்தொகுதியை ஒப்படைத்து விட்டு எடப்பாடி பழனிசாமி தப்பிவிட நினைக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

ஈரோட்டில் போட்டியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். ஓபிஎஸ் என்ன சொல்கிறார் என்பதற்காகக் காத்திருப்பதாகக் காத்திருக்கிறோம். இரட்டை இலைக்குச் சொந்தக்காரர் ஓபிஎஸ் மட்டுமே ஆவார். தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக ஓபிஎஸ் உடன் பேசி தான் முடிவு செய்வார்கள் எனக் குறிப்பிட்டார்.



மேலும் தொடர்ந்து பேசிய அவர், சொந்த தொகுதியில் நின்று தோல்வி கண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அரசியல் அனாதை ஆகி விட்டார். அவருக்குக் கருத்துச் சொல்ல உரிமை இல்லை. திரை மறைவில் அதிமுகவை ஒழிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

பழனிசாமி என்ற சர்வாதிகாரி ஒழிய வேண்டும் என்பதற்காகவே தான் ஓபிஎஸ் உடன் இருக்கிறேன்.தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை விட, முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி புத்திசாலி. கள நிலவரம் தெரிந்தவர்.

தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்து விட்டதால், அவருக்குக் கட்சியில் எந்த பதவியும் இல்லை. அதிமுகவிற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

மேலும் எடப்பாடி பழனிசாமியுடன் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெற்றி பெற்றது ஓபிஎஸ் ஆல் மட்டுமே. ரோஷம் இருந்தால் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் கையெழுத்திட்ட பதவியை ராஜினாமா செய்யட்டும், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...