துடியலூரில் மதுபானங்கள் விற்ற இருவர் கைது!

துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பிரமணியம்பாளையம் மற்றும் கே.என்.ஜி.புதூர் பகுதிகளில் அரசு மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்த 2 நபர்கள் கைது.


கோவை: துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசு மதுபானங்களைக் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 40 மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் அரசு மதுபானங்கள் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அங்குச் சென்ற துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குரு சந்திர வடிவேல், அங்கு மதுபானங்களை விற்றுக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரைக் கைது செய்து அவரிடம் இருந்து 22 மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்தார்.

இதேபோல் கே.என்.ஜி.புதூர் பகுதியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்பவரையும் மது விற்றதாகக் கைது செய்தார். அவரிடம் இருந்து 18 பாட்டில் மது பறிமுதல் செய்து இருவரைக் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...