உடுமலை அருகே எஸ்வி புரத்தில் நிழற்கூரை அமைக்கக் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள எஸ்.வி புரத்தில் நிழற்கூரை அமைக்க அதிகாரிகளுக்குச் சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை.


திருப்பூர்: எஸ்.வி புரத்தில் நிழற்கூரை அகற்றப்பட்ட இடத்தில் புதிய நிழற்கூரை அமைக்கக் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை - கொழுமம் சாலையில் உள்ள எஸ்.வி.புரத்தில், நிழற்கூரை இருந்தது. நகரை ஒட்டியுள்ள, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார் கிராம ஊராட்சிகளிலிருந்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதைப்பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் அங்கிருந்த பேருந்து நிறுத்த நிழற்கூரை பழுதடைந்து, ஆபத்தான நிலையிலிருந்தது.

இதனையடுத்து, பேருந்து நிறுத்த நிழற்கூரை அகற்றப்பட்டது. ஆனால், புதிதாக நிழற்கூரை அமைக்காமல், பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பேருந்திற்காகக் காத்திருக்கும் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், வெயிலிலும், மழையிலும் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.



மக்கள் சாலையில் காத்திருக்கும் போதும், அதிவேகமாக வரும் வாகனங்களாலும், பேருந்து நிறுத்தம் அடையாளம் இல்லாததால், தாறுமாறாக நிறுத்தப்படும். பேருந்துகளால் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. எனவே, எஸ்.வி.புரத்தில் புதிதாகப் பேருந்து நிறுத்த நிழற்கூரை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்து உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...