குருடம்பாளையம் ஊராட்சியில் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு முகாம்

கோவை அருகே குருடம்பாளையம் ஊராட்சியில் நடந்த அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு முகாமில் தென்னை கன்றுகள், காய்கறி விதைகள் விநியோகம்.



கோவை: கோவை மாவட்டம் வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் குருடம்பாளையம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு முகாம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.



இதில் வேளாண் வணிகம், வேளாண்மை துணை இயக்குநர் பெருமாள்சாமி ஆலோசனையின்படி குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒட்டுமொத்த கிராம வளர்ச்சி மற்றும் விவசாயிகள் பயன் பெறும் வகையில் பட்டா, சிறு, குறு à®µà®¿à®µà®šà®¾à®¯à®¿à®•ள் சான்று, பயிர்க் கடன் மற்றும் கிசான் அட்டை விண்ணப்பம் பெறுதல், வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறையின் சார்பாகத் தென்னை கன்றுகள் வினியோகம், காய்கறி விதைகள் விநியோகம் செய்யப்பட்டதன.

இந்த முகாமில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் திட்ட விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் டி.ரவி தலைமை தாங்கி சான்றிதழ்களை விவசாயிகளுக்கு வழங்கினார். வேளாண்மை அலுவலர் அன்னபூரணி, பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

பெரியநாயக்கன்பாளையம் வேளாண்மை உதவி அலுவலர் மணி அனைவரையும் வரவேற்றார்.



முகாமில் உழவர் சந்தை உழவர் அட்டை வழங்குதல், 2 கோடி வரை கடன் ஏற்பாடு செய்தல் உள்ளிட்டவைகளும் நடைபெற்றது.

இந்த முகாமில் ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம், ஊராட்சி கவுன்சிலர்கள், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வருவாய்த்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, விதை சான்று துறை, வேளாண்மை பொறியியல் துறை, கூட்டுறவுத் துறை, மின்சார துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் திரளாகக் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...