வால்பாறையில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக சட்டப்பேரவையின் மாண்பைச் சீர்குலைத்த ஆளுநரைக் கண்டித்து வால்பாறையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.


கோவை: வால்பாறையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆளுநருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறை பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் அமீர் தலைமையில் தமிழக சட்டப்பேரவையின் மாண்பைச் சீர்குலைத்த தமிழக ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்து,கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தமிழக ஆளுநரைக் கண்டித்துக் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன, தமிழகத்தின் மாண்பைக் கருத்தில் கொண்டு, ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.



இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கம் தலைவர் கருப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டு கையில் கட்சி கொடியேந்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...