கோவை பேரூர் பகுதியில் சேவல்சண்டை - 6 பேர் கைது

கோவை புறநகர் பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சட்ட விரோதமாகச் சேவல் சண்டை நடத்திய 6 பேர் கைது.


கோவை: பேரூர் சுடுகாடு அருகே பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட 6 பேரை பேரூர் போலீசார் கைது செய்தனர்.

கோவை புறநகர்ப் பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சட்ட விரோதமாகச் சேவல் சண்டை நடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்நிலையில், பேரூர் சுடுகாடு அருகே உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குச் சேவல் சண்டை நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து சேவல் சண்டையில் ஈடுபட்டு அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (35), மணிகண்டன் (35), ராஜேந்திரன் (38), முருகன் (37), பழனிச்சாமி (53), கண்ணன் (46) ஆகிய 6 பேரைக் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 2 சேவல் மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...