கோவை தடாகம் சாலையில் மாதிரி ரவுண்டானா அமைப்பு

கோவை தடாகம் ரோடு, லாலிரோடு, சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், மக்கள் சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதற்காகவும், மாநகர காவல் மற்றும் போக்குவரத்து பிரிவின் சோதனை முயற்சியாக மாதிரி ரவுண்டானா அமைத்து சோதனை ஓட்டம்.


கோவை: மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், மக்கள் சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் வகையில் மாதிரி ரவுண்டானா அமைக்கப்பட்டது.

கோவை, தடாகம் ரோடு, லாலிரோடு, சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், மக்கள் சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதற்காகவும், மாநகர காவல்,போக்குவரத்து பிரிவின் சோதனை முயற்சியாக, சாலை பாதுகாப்பு கோட்டப் பொறியாளர் மனுநீதி மற்றும் அந்த பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள், மாநில நெடுஞ்சாலைகள் பிரிவு உதவி கோட்டப் பொறியாளர் எஸ்.சோழவளத்தான் மற்றும் அந்த பிரிவைச் சேர்ந்த அலுவலர்களுடன் இணைந்து மாதிரி ரவுண்டானா அமைத்து சோதனை ஓட்டம் இன்று மாலை 4.00 மணிமுதல் நடைபெற்றது.

இதனால், கௌலிபிரவுன் சாலை வழியாக மருதமலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள், உழவர் சந்தையை அடுத்த குரு கோவிந்தசிங் சாலையில் இடது புறமாகத் திரும்பி, மேற்கு பெரியசாமி ரோடு, தடாகம் ரோடு வழியாக, லாலிரோடு ஜங்ஷனை அடைந்து அங்குச் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப, பயணம் மேற்கொள்ளலாம்.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி, மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு தங்களது ஒத்துழைப்பை அளிக்குமாறு காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



இதனை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் நேரில் ஆய்வு செய்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...