கோவை குற்றாலத்தில் போலி ரசீது மூலம் கட்டணமாக ரூ.35 லட்சம் வசூல் - வனவர் பணியிடை நீக்கம்

கோவை அருகே உள்ள கோவைக் குற்றால அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் போலி நுழைவுச் சீட்டை வழங்கி, பல லட்சம் ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட வனவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ரூ.35 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



கோவை: கோவை ஆலந்துறை அடுத்த சாடிவயல் போளுவாம்பட்டி வனப்பகுதியில் கோவை குற்றால அருவி அமைந்துள்ளது. கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் இதுவும் ஒன்று. கோவை குற்றாலம் அருவிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

குறிப்பாக, வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு வருவது வழக்கம். போளுவாம்பட்டி வனச்சரகத்தில் அமைந்துள்ளதால், சுற்றுலாவை மேம்படுத்த கோவை குற்றால அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.60, குழந்தைகளுக்கு ரூ.30, இருசக்கர வாகனம் நிறுத்த ரூ. 20, கார்கள் நிறுத்த ரூ.50-ம் வனத்துறை வசூலித்து வருகிறது.

இந்த நிலையில், இந்த கட்டண வசூலில் பல லட்சம் ரூபாய் முறைகேடுகள் நடந்திருப்பது அண்மையில் தெரியவந்தது. நுழைவு சீட்டுகள் வழங்கும் இடத்தில், இரண்டு மெஷின்களில் நுழைவு கட்டண சீட்டை அச்சிட்டு பணத்தை பெறுவதும், அதில் ஒரு மிஷினில் பதிவு செய்யப்படும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கான தொகை மட்டுமே அரசுக்கு செல்லும் வகையில் பதிவு செய்யபட்டிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மற்றொரு மெஷினில் நுழைவு கட்டணம் போன்றே போலியான நுழைவு சீட்டை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி அதற்காக வசூலிக்கப்படும் தொகையை அதிகாரிகளே எடுத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுவந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. கடந்த ஆறு மாத காலத்தில், இந்த வகையில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதற்கு முன்பு இருந்த வனச்சரக அதிகாரியும் இதே மோசடியில் ஈடுபட்டுவந்திருப்பதும் உறுதியானது.

இது தொடர்பாக, வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட தொடர் விசாரணையில், போளுவாம்பட்டி வனச்சரகத்தில் வனவராக பணியாற்றி வரும் ராஜேஷ்குமார், இந்த நூதன மோசடியை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, முன்னாள் போளுவாம்பட்டி சரக ரேஞ்சர் சரவணன் உதவியுடன் கடந்த 2021 ல் இருந்து போலி சீட்டுகளை வழங்கி பல லட்சம் மோசடி செய்திருப்பது விசாரணையில் உறுதியானது.

இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட வனவர் ராஜேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார், மேலும், வனவர் ராஜேஸ்குமாரிடம் இருந்து ரூ.35 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளிடம் போலி நுழைவுச் சீட்டை வழங்கி பல லட்சம் ரூபாய் பண மோசடியில் வனத்துறை அதிகாரிகளே ஈடுபட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...