திருப்பூர் மடத்துக்குளம் அருகே பைக் மோதி விபத்து - பாதயாத்திரை சென்ற கூலித்தொழிலாளி பலி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகிலுள்ள சாமராயப்பட்டியைச் சேர்ந்த செல்லத்துரை, குடும்பத்துடன் பழனிக்கு பாதயாத்திரை சென்றபோது பைக் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி கண்முன்னே கணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தையடுத்த சாமராயப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 46). கூலித்தொழிலாளியான இவர், தமது மனைவி மற்றும் 5வயது மகளுடன் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை புறப்பட்டுச் சென்றார். சாமராயப்பட்டி அருகே தனது மகளை தூக்கி தோளில் வைத்துக்கொண்டு செல்லத்துரை நடந்து சென்றுகொண்டிருந்தார்.



குமரலிங்கம் செல்லும் சாலையில் நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக செல்லத்துரை மீது பயங்கரமாக மோதியது. இதில் செல்லத்துரை மற்றும் அவர் மகள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

செல்லத்துரையின் மகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்லத்துரையை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்தவர்கள் கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து குமரலிங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய செல்வகுமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதயாத்திரை செல்லும்போது மனைவியின் கண் முன்னே கணவன் விபத்தில் பலியான சம்பவம் சாமராயப்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...