திருப்பூர் குண்டடம் அருகே இருசக்கர வாகனம் மீது கார்‌ மோதி விபத்து - தொழிலாளி பலி!

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், தேங்காய் வெட்டும் தொழிலாளி உயிரிழந்தார்.


திருப்பூர்: குண்டடத்தை அடுத்துள்ள இடையபட்டியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 54). இவர் தேங்காய் வெட்டும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று தாராபுரம்-கோவை ரோட்டில் குண்டடத்தை அடுத்துள்ள மேட்டுக்கடை பஸ் நிறுத்தம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, அந்த வழியாக கோவை நோக்கிச் சென்ற கார், எதிர்பாராதவிமாக சண்முகதின் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சண்முகத்தின் ஒரு கால் துண்டாகியது. மேலும் அவர் காருடன் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு கீழே விழுந்தார்.

படுகாயமடைந்த சண்முகத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சண்முகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...