கோவை த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணனின் மனைவி காலமானார் - நாளை இறுதி ஊர்வலம்

கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணனின் மனைவி வசந்தி இன்று காலமானார்.


கோவை: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக கு.இராமகிருட்டிணன் இருந்துவருகிறார். இவரது மனைவி வசந்தி, வயது 59. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வசந்தி, சிகிச்சை பலனின்றி இன்று காலை 10 மணி அளவில் காலமானார்.

வசந்தியின் உடலுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், அவரது இறுதி ஊர்வலம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் வெ.ஆறுச்சாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...