ஒரே நேரத்தில் 6 பேருந்து நிலையங்களில் தூய்மை பணி - சாதனை படைத்த கோவை மாநகராட்சி!

கோவையில் கல்லூரி மாணவ-மாணவியருடன் இணைந்து 6 பேருந்து நிலையங்களை தூய்மைப்படுத்தி நோபல் உலக சாதனைப் புத்தகத்தில் மாநகராட்சி நிர்வாகம் புதிய சாதனை படைத்துள்ளது.



கோவை: தமிழகத்தை தூய்மையான மாநிலமாக மாற்ற தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து மாநகராட்சியையும் தூய்மையாக வைக்க வேண்டும் எனவும், இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கவும் அறிவுறுத்தி இருந்தார். அந்தவகையில், கோவை மாநகராட்சியில் தூய்மை இயக்கம் திட்டத்தை துவக்கி மாதத்திற்கு இரண்டு முறை தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.



கோவையை தலைமையிடமாக கொண்டு 2015 ஆம் துவங்கப்பட்ட க்ளீன் டச் (Clean Touch) நிறுவனம் வீடு மற்றும் அலுவலகம், தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகளை செய்து வருகின்றனர்.



சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் என 200 க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் தூய்மை இந்தியாவை வலியுறுத்தும் விதமாக கோவையில் புதிய சாதனை செய்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.



இதன் ஒருபகுதியாக, கோவை மாநகராட்சியை தூய்மையான நகரமாக மாற்றும் நோக்கத்தோடு, கிளீன் டச் நிறுவனத்துடன் இணைந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மாநகராட்சி சார்பில் தூய்மை பணியை தொடங்கி வைத்தனர்.



இதனைத்தொடர்ந்து, ஒரே நேரத்தில் கோவையில் காந்திபுரம் பகுதியில் உள்ளூர், வெளியூர் என மூன்று பேருந்து நிலையங்கள் மற்றும் உக்கடம், சிங்காநல்லூர், சாய்பாபாகாலனி ஆகிய ஆறு முக்கிய பேருந்து நிலையங்களை 600 கல்லூரி மாணவர்களை கொண்டு மாநகராட்சியினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த விழிப்புணர்வு முயற்சியானது நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இந்த சாதனை நிகழ்வு குறித்து க்ளீன் டச் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அனீஷ் கூறுகையில், நோயற்ற வாழ்விற்கு தூய்மையான சூழல் அவசியம், அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சாதனையை செய்ய முன்வந்ததாகவும் தெரிவித்தார்.

ஹிந்துஸ்தான் ஸ்கௌட் அண்ட் கைட் இணைந்து வழங்கிய சாதனையை தீர்ப்பாளர் அரவிந்த் கண்காணித்தார். நோபல் உலக சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ் சாதனை புரிந்த க்ளீன் டச் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அனீஷ் மற்றும் நிர்வாகி ரேஷ்மா மனோகருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.

கோவை மாநகரை, மக்கள் தங்களுடைய நகரமாக நினைத்து தூய்மையாக வைத்துக்கொள்ள முன்வரவேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...