உடுமலை திருப்பதி கோவிலில் பள்ளி மாணவர்களுக்காகச் சிறப்பு யாகம்!

உடுமலை ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு, நீட் தேர்வு மற்றும் போட்டி தேர்வு எழுதும் மாணவ மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டிச் சிறப்புப் பூஜை.


திருப்பூர்: உடுமலை ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்புப் பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஸ்ரீ சடகோப இராமானுஜ ஜீயர் சுவாமிகள் கலந்துகொண்டார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை தளிரோடு பள்ளபாளையம் அருகே செங்குளம் கரையில் உடுமலை ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது.



இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு, நீட் தேர்வு மற்றும் போட்டி தேர்வு எழுதும் மாணவ மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டிச் சிறப்புப் பூஜை நடந்தது.



இந்த பூஜையில் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஸ்ரீ ஸ்ரீ சடகோப இராமானுஜ ஜீயர் சுவாமிகள் கலந்துகொண்டு பூஜையில் வைக்கப்பட்ட பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்கினார்.



இந்த சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.



இதற்கான ஏற்பாடுகளை உடுமலை பாலாஜி சாரிட்டபிள் ட்ரஸ்ட் நிர்வாக அறங்காவலர்‌‌ ராமகிருஷ்ணன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...